பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 தேவை கைது செய்த காங்கேயம் காவல்துறையினர்;
காங்கேயம்-சென்னிமலை சாலையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய இல்லியம்புதூரை சேர்ந்த சிவகுமார் (வயது 47), அரச்சலூர் அம்மாபாளையம் குப்பியண்ணன் (40), சடையம்பாளையம் எரகம்பட்டி பகுதியைச் சேர்ந்த கனியாளன் (55), திருப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (45), காடையூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (51) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மற்றும் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.