பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது;
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலகிருஷ்ணாபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய பிராங்க்ளின், பிச்சை, வினோத்குமார், சிங்கராயர், ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.