தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு இருந்த 5 நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு
பரபரப்பு;
தேனி மாவட்ட பாரதிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக இருப்பவர் முருகன் இவர் தேனி அல்லிநகரத்தில் வசித்து வருகிறார் இவர் கடந்த ஒரு வாரம் முன்பு தேனி பைபாஸ் சாலை அருகே புதிதாக வீடு கட்டி இல்ல விழா நடத்தியுள்ளார் இந்த நிலையில் இவர் புது வீட்டில் காவலாளி இன்று காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் கவரில் சந்தேகத்திற்கிடமான பொருள் குறித்து சந்தேகம் அடைந்து வீட்டின் உரிமையாளரிடம் தகவல் கொடுத்தார் இதனை அடுத்து முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பார்த்தபோது கவரில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது பின்னர் இது குறித்து அல்லிநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து வெடிகுண்டு செயலிழப்பு துறையினரை வரவழைத்து சோதனை செய்தனர் பின்னர் வெடிகுண்டு சோதனை கருவி வைத்து ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவரில் இருந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி ஆய்வுக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனார் புதிய வீட்டிற்கு இன்னும் ஒரு சில நாட்களில் குடியேற உள்ள நிலையில் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனது வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட நபர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்