அரசு பள்ளிக்கு டிசிடபிள்யூ சார்பாக 5 கணினிகள்! வழங்கல்

காயல்பட்டிணம் அரசு பள்ளிக்கு டிசிடபிள்யூ சார்பாக 5 கணினிகள்! வழங்கல்;

Update: 2025-08-12 03:48 GMT
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் சார்பாக 5 கணினிகளை நிறுவனத்தின் பொது மேலாளர் முஸ்தபா நன்கொடையாக வழங்கினார். மேலும், முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் 20 சீலிங் ஃபேன்கள் வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சித் தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முஸ்லிம் இக்கிய பேரவைத் தலைவர் சதக்கு தம்பி, பொதுக்குழு உறுப்பினர் ஆடம் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News