தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு அரசி, புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்! பெரியம்மாபாளையம் கிராமத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா;
பெரம்பலூர் மாவட்டம்! வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்! பெரியம்மாபாளையம் கிராமத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்- சைதை.சாதிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் !தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு அரசி, புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது! பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், பெரியம்மாபாளையம் கிராமத்தில், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி தலைமையில், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ் வரவேற்புரையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் சைதை.சாதிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி , புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் சி.ராஜேந்திரன்,தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன்,ந.ஜெகதீஷ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, ஆர்.முருகேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், முன்னாள் பெருந்தலைவர் க.ராமலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட பிரதிநிதி எஸ்அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அ.சுல்தான் நன்றியுரையாற்றினார்.