நாய்கள் விரட்டியதால் மிரண்டு 50 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் தவறி விழுந்த பசு மாடு
பசு மாடு;
ஆண்டிபட்டி அருகே நாய்கள் விரட்டியதால் மிரண்டு 50 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் தீயணைப்புதுறை மற்றும் கிராமமக்கள் ஒரு மணி நேரம் வரை போராடி மீட்டநிலையிலும் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைபட்டி பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அதனருகே சண்டையிட்டு கொண்டிருந்த நாய்கள் பசுமாடுகளை விரட்டியதால் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட இரண்டு பசு மாடுகளில் ஒன்று 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி தீயணைப்புதுறையினர் மற்றும் கிராமமக்கள் இணைந்து ஜேசிபி எந்திரம் , இரண்டு டிராக்டர் வாகனங்களின் உதவியுடன் கயிறு கட்டி ஒரு மணி நேரம் வரை போராடி கிணற்றில் இருந்த பசுமாட்டை மீட்டனர் மீட்டபோதிலும் பசுமாடு காயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது நாய்கள் விரட்டியதில் தவறி விழுந்து மிகவும் போராடி மீட்கப்பட்ட பசுமாடு உயிரிழந்ததால் கிராமமக்கள் மிகவும் கவலை அடைந்தனர்