விழுப்புரத்தில் வெள்ளத்தில் பாதித்த 50 பேருக்கு பா.ஜ., தலா ரூ.5,000 நிவாரணம்
வெள்ளத்தில் பாதித்த 50 பேருக்கு பா.ஜ., தலா ரூ.5,000 நிவாரணம்
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஐ.டி.பிரிவு மாநில செயலர் கார்த்திகேயன் வரவேற்றார். பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் முரளி ரகுராம், பொதுச்செயலர் எத்திராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், மாநில நிர்வாகி லோகராஜன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் வாஜ்பாய் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின் மாநில துணை தலைவர் சம்பத் பங்கேற்று, முதல் கட்டமாக, வீடுகளை சீர்செய்வதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த குடும்பத்தினர் 50 பேருக்கு, தலா ரூ.5,000 நிவாரண தொகையை வழங்கினர். மேலும், அவர்களது குடும்பத்திற்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.விழுப்புரம் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட நிர்வாகிகள் பார்த்திபன், குபேரன், ஸ்ரீதேவி, வனிதசுதா, தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரபாகரன், கல்வியாளர் பிரிவு மணபாலன், நகர தலைவர்கள் வடிவேல் பழனி, விஜயன், தென்னரசு, பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.