அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்.சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.
அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்.சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.;
அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்.சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி. அரவக்குறிச்சி டாஸ்மார்க் கடையில் இருந்து வசூல் ஆகும் பணம் அங்கு செயல்படும் வங்கியில் செலுத்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன பணத்தை கட்ட அரவக்குறிச்சி அரசு வங்கிக்கு ஊழியர்கள் சென்றனர். வங்கியில் பணத்தை எண்ணிய போது ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருந்தது தெரிய வந்தது. வங்கி கேசியர் அந்த நோட்டை திருப்பி தரவில்லை. அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தரப்பு கடை உரிமையாளர்களும் அனைத்து தரப்பிலிருந்து வரக்கூடிய மற்றும் பெறக்கூடிய 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கவனத்துடன் கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு லாலாபேட்டை பகுதியில் இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.