எடப்பாடி அருகே சித்தூர் ஸ்ரீ படவெட்டி அம்மன் தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சித்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ படவெட்டி அம்மன் தீர்த்தக்கர ஊர்வலம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.;

Update: 2024-12-02 15:40 GMT
எடப்பாடி அருகே சித்தூரில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ படவெட்டி அம்மன்,ஸ்ரீ முத்து முனியப்பன் மஹாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சித்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ படவெட்டி அம்மன்,ஸ்ரீ முத்து முனியப்பன் கோவில் மற்றும் நூதன ராஜகோபுர புனராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகின்ற வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து  புனித தீர்த்தக்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  முன்னதாக சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடி கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு பம்பை மேல வாத்திய தாளங்கள் முழங்க மேல் சித்தூர் பகுதியில் இருந்து சித்தூர் கோவில் வரை முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் பத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுத்து, வெள்ளை குதிரைகள் மேளதாளத்திற்கு ஏற்ப நடனமாடி அனைவரையும் வியப்படையச் செய்தது தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீர்த்தகுடம் எடுத்துக் கொண்டு.ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ படவெட்டி அம்மன்,ஸ்ரீ முத்து முனியப்பன் கோவில் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News