கல்வித்துறைக்கு ரூ. 5000 வழங்கிய 5 ம் வகுப்பு குமரி மாணவி 

கன்னியாகுமரி;

Update: 2025-02-26 03:57 GMT
கன்னியாகுமரியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுமி ஜாக்குலின் ரோஸ் தனது சேமிப்பில் இருந்து தமிழ்நாடு கல்வித்துறைக்கு ரூபாய் 5000 வழங்குவதாக கூறி வீடியோ பதிவிட்டு துணை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார்.      அந்த சிறுமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள வீடியோவில் கூறியிருப்பது:-  அனாதை மொழியான இந்தி மொழி எம் ஆதிமொழியான தமிழ் மொழியை ஆள நினைக்கலாமா?  இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழே அறம். தமிழே உயிர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன?  இதோ நான் எனது சிறு சேமிப்பிலிருந்து ரூ 5,000-த்தை தமிழ்நாடு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன். தமிழ் வாழ்க. என்று பதிவிடப்பட்ட வீடியோவை துணை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.

Similar News