திருமயம் கோட்டை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (50) என்பவரது மகள் ஹேமா துணிக்கடையில் தீபாவளிக்காக ஜவுளி எடுத்துவிட்டு மீதி பணத்துடன் புதுகை தபால் நிலையம் அருகே பேருந்தில் ஏறி பழைய பெரிய ஆஸ்பத்திரி வந்துள்ளார். அப்பொழுது பையை பார்க்கும்போது அதில் இருந்த 50,000 காணவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து தனலட்சுமி கொடுத்த புகார் பேரில் காவல்துறையினர் பேருந்து முழுவதும் சோதனை செய்து பணம் கிடைக்கவில்லை.