பேரூர்: மருதமலை கோவிலில் ரூ.51 லட்சம் உண்டியல் காணிக்கை !

கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

Update: 2025-01-10 04:06 GMT
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கையை எண்ணியதில், கோவிலில் உள்ள 14 பொது உண்டியல்களில் மொத்தம் ரூ.48 லட்சத்து 31 ஆயிரத்து 590-ம், கோசாலை உண்டியலில் ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 245-ம் என மொத்தம் ரூ.50 லட்சத்து 92 ஆயிரத்து 835 காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதுதவிர 23 கிராம் தங்கம், 1 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.கோவில் அறங்காவலர் குழு தலைவர், துணை ஆணையர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், முன்னிலையில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News