மேலப்பாளையம் 52வது வார்டில் தொற்றுநோய் பரவும் அபாயம்
மேலப்பாளையம் மண்டலம்;
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டு ரெட்டியார்பட்டி ரோடு ஹக் காலனியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து ஓடுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.