பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 536 மனுக்கள்

மனுக்கள்

Update: 2024-07-30 02:23 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 536 மனுக்கள் பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில், பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை என பல்வேறு துறை சார்ந்த 536 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், 14 மீனவ, மீனவ மகளிர் கூட்டுறவு சங்க பயனாளிகளுக்கு பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4.65 லட்சம் மதிப்பில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News