கரூரில் 588 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மற்றும் திட்ட நிதியாக 41.10 கோடி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூரில் 588 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மற்றும் திட்ட நிதியாக 41.10 கோடி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Update: 2024-09-09 13:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் 588 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மற்றும் திட்ட நிதியாக 41.10 கோடி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா இன்று காலை மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியின் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், இணை பதிவாளர், மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற நிகழ்வில் கரூர் மாவட்டத்தில் செயல்படும் 588 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வங்கி கடன் மற்றும் திட்ட நிதியாக 41.10 கோடி ரூபாய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். வங்கி கடன் பெற்றுக்கொண்ட சுய உதவி குழுவினர், தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Similar News