கடமலைக்குண்டு அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த மயிலாடும்பாறை போலீசார்
பள்ளத்தூரை சேர்ந்த ஜெயராமன் 52, கோம்பைத்தொழு கருப்பசாமி 19, பாண்டீஸ்வரன் 20, தெய்வேந்திரன் 39, அரண்மனைபுதூர் ஈஸ்வரன் 34,கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் மயிலாடும்பாறை அருகே கொங்கரேவு ஓடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மயிலாடும்பாறை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 390 கிராம் கஞ்சா இருந்துள்ளது. சில்லறை விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பள்ளத்தூரை சேர்ந்த ஜெயராமன் 52, கோம்பைத்தொழு கருப்பசாமி 19, பாண்டீஸ்வரன் 20, தெய்வேந்திரன் 39, அரண்மனைபுதூர் ஈஸ்வரன் 34,கைது செய்தனர். மலை கிராமங்களில் வேறு எங்கேயும் கஞ்சா சில்லறை விற்பனை நடக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.