மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சமூக ஆர்வலர்
மருந்தாளுநர் ரஞ்சித்குமார் இராஜதானி சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு முடி வெட்டி சுத்தம் செய்து மாற்று உடை அணிவித்து பெரியகுளம் அரசு தலைமை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்து விடப்பட்டார்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சமூக ஆர்வலர் ஆண்டிபட்டி-வேலப்பர் கோவில் செல்லும் சாலையில் பிச்சம்பட்டி அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் திருமணம் ஆகாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி கிழிந்த ஆடையுடன் சுற்றித்திரிந்தார். அவரை அவ்வழியாகச் சென்ற ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் இராஜதானி சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு முடி வெட்டி சுத்தம் செய்து மாற்று உடை அணிவித்து பெரியகுளம் அரசு தலைமை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்து விடப்பட்டார்.அவர் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணையில் அப்பெண் தென்காசி மாவட்டம் என்பது மட்டும் தெரியவந்தது.மேலும் குணமான பின்பு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியை எடுத்து வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பாராட்டினை பெற்றது.