மைத்துனரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில்
சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு;
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் விஜயகாந்தன். (வயது 52), தொழிலாளி. இருடைய மனைவி கவுரி. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2020-ம்ஆண்டு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை கவுரியின் தம்பி நந்தகுமார் தட்டி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்தன், மைத்துனர் நந்தகுமாரை அரிவாளால் வெட்டினார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்தனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கூடுதல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், மைத்துனரை அரிவாளால் வெட்டிய விஜயகாந்தனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.