வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் அருகே தக்க வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறை, ரூ.1,12,000 அபராதம்;
னனதிண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமலைபுதூர் பகுதியை சேர்ந்த தாமஸ் பெர்னாண்டோ(28) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தாமஸ் பெர்னான்டோ-விற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்