சேலம் மாநகரில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
போலீஸ் கமிஷனர் உத்தரவு;
சேலம் அன்னதானப்பட்டி போலீசில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணையன், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் நெப்போலியன், கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் கோவை மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் தவமணி அழகாபுரத்திற்கும், அங்கு பணியாற்றிய காந்திமதி அஸ்தம்பட்டிக்கும், அழகாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் வீராணம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், சிவகங்கையில் இருந்து சேலம் வந்த இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பள்ளப்பட்டிக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பிறப்பித்துள்ளார்.