கோட்டையூர் பகுதியில் புகையிலை விற்ற 6 கடைகளுக்கு சீல்

நத்தம் அருகே கோட்டையூர் பகுதியில் புகையிலை விற்ற 6 கடைகளுக்கு சீல்;

Update: 2025-07-12 20:06 GMT
நத்தம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நத்தம் வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நத்தம் அருகே கோட்டையூர் பகுதியில் உள்ள 6 பெட்டிக்கடை மற்றும் மளிகைக்கடைகளில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடைகளில் இருந்து 2 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு கடைக்கு தலா 25 ஆயிரம் வீதம் 6 கடைகளுக்கு அபாரதம் விதித்தனர். தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Similar News