நாளை டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு
திண்டுக்கல் ரயில் நிலையம்;
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் அறை, பார்சல் அலுவலகம், நடைமேடை, தண்டவாளப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். பழனி ரயில் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் இணைந்து ரயில் பயணிகளின் உடமைகள், நடைமேடை, இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆட்டோகள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்