ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சம் முதல் 7 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன-நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் மறு நில அளவை திட்டத்தை தொடக்கி வைத்து வருவாய் மற்றும்
ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சம் முதல் 7 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன-நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் மறு நில அளவை திட்டத்தை தொடக்கி வைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேச்சு*;
திமுக பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வருவாய்த்துறை மூலம் ஒருகோடியே 60 நபர்களுக்கு பட்டாவழங்கப்பட்டுள்ளது;ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சம் முதல் 7 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன-நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் மறு நில அளவை திட்டத்தை தொடக்கி வைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேச்சு விருதுநகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் மறு நில அளவை திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நில அளவைத் துறையை நவீனமயமாக்குவதற்காகவும் பொதுமக்களுக்கு எளிதான முறையில் நில அளவை வரைபடம் கிடைக்கக் கூடியவகையில் இந்த பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ட்ரோன் மூலம் ஒவ்வொருவரின் நிலத்தை அளவெடுத்து ஒவ்வொருவருக்கும் பட்டாவுடன் வரைபடம் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் ஆறு மாத காலத்திற்குள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த வரைபடத்துடன் தங்கள் இடத்தின் அளவு வழங்கப்படும் எனவும் முதற்கட்டமாக தமிழகத்தில் இந்த திட்டம் 10 மாநகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழகத்தில் இலவச பட்டா வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக அரசை விட இந்த அரசு சிறப்பாக செய்து வருவதாகவும் இலவச பட்டா மாறுதல் மட்டுமின்றி பாகப்பிரிவினை, சொத்து பிரித்தல் உள்ளிட்ட ஒரு கோடியே 60 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கி இருப்பதாகவும் வருடத்திற்கு 6 முதல் 7 லட்சம் பட்டாக்களை பொதுமக்களுக்கு வழங்கி இருப்பதாகவும் இந்தத் துறையின் மூலம் தமிழக மக்களுக்கு தேவையான சராசரியான பணிகளை உடனடியாக செய்து தரக் கூறி தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.