கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழிப்பு
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 11:35 GMT
சாராய ஊரலை அழித்த போலீசார்
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின்பேரில், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விளாம்பட்டி கிராமத்தில் உள்ள மேற்குமலை பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 3 பேரல்களில் இருந்த 600 லிட்டர் சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.