விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காட்டு மாடு தாக்கி சம்பவ இடத்திலே பலி.வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை.*

விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காட்டு மாடு தாக்கி சம்பவ இடத்திலே பலி.வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை.*;

Update: 2025-02-21 12:01 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காட்டு மாடு தாக்கி சம்பவ இடத்திலே பலி.வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தோப்பு காளியம்மன் கோவில் அருகே உள்ள ராம் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய காடு உள்ளது. இக்காட்டில் மா பலா தென்னை விவசாயம் நடந்து வருகிறது.இதனை கணபதி சுந்தரநாச்சியாபுரம் கிராமம் காலனி தெருவை சார்ந்த 68 வயது மூதாட்டி சுந்தராம் மாள் என்பவர் அவரது 20 வயது மகன் அலெக்ஸ் பாண்டியன் உடன் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினமான இன்று சுந்தராம்பாள் அவரது மகன் அலெக்ஸ் பாண்டியனுடன் மாடுகளுக்கு புல் அறுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அருக்கப்பட்ட புல்லினை சுந்தரம்பாளின் மகன் சேகரித்து மாட்டு தொழுவத்தில் வைத்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது தாய் சுந்தராம்மாள் காட்டு மாடு தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகன். அக்கம்பக்கத்து விவசாயிகள் உதவியுடன் அவரை மீட்டு தொழுவத்திற்கு அருகே கொண்டு வந்து சேர்த்து பின்னர் வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News