தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து புதுகை மாவட்டத்துக்கு கடத்தி செல்வதாக இலுப்பூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு திவ்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 650 கி புகையிலை இருப்பது தெரியவர 2 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்