காங்கேயத்தில் தேங்காய் பருப்பு ரூ. 67 ஆயிரத்திற்கு ஏலம்
காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ. 67 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது.
காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் காங்கேயம் பகுதியில் சேர்ந்த விவசாய ஒருவர் 694 கிலோ இடையுள்ள 14 தேங்காய் பருப்பு மூட்டையில் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார். அதனை காங்கேயம் சுற்றுவட்டார பகுதியான காங்கேயம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த மூட்டைகளை ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஒரே விலையாக ரூ 96.90 தேங்காய் பருப்பு ஏலம் எடுக்கப்பட்டது. 694 கிலோ எடையுள்ள 14 தேங்காய் பருப்பு மூட்டைகள் ரூ.67 ஆயிரத்து 249க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.