ராமநாதபுரம் மாவட்டம் 67 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மீனவர்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை கிராமத்தில் வசிக்கும் மீனவரின் வீட்டிற்கு ரூபாய் 67 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மீனவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு;

Update: 2025-06-27 07:09 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வரும் மீனவரான சேக் ஜமாலுதீன் என்பவரின் சுனாமி வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு வரும் முறை ரூபாய் 500 மற்றும் 600 ரூபாய் க்குள் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் மின் கட்டணம் எடுக்க வந்த மின் கணக்கீட்டாளர் ரூபாய் 67,554 உங்கள் வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். மீனவர் ஆன செக் ஜமாலுதீனுக்கு ரூ ,67,554 கட்ட வேண்டுமா என்று அதிர்ச்சி அடைந்த அவர் மண்டபம் கேம் அமையப்பட்டுள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் மீனவரை மிரட்டும் தொணியில் நீங்கள் ரூபாய் 67 ஆயிரத்து 554 ரூபாய் கட்ட வேண்டும் இல்லையென்றால் உங்கள் வீட்டில் மின் மாற்றி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் தொணியில் பேசியதால் அதிர்ச்சி அடைந்த மீனவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்துள்ளார் மேலும் மீனவரான நான் மீன்பிடி செய்து தொழில் செய்து வருகிறேன் இவ்வளவு தொகை என்னால் கட்ட முடியாது ஆகையால் தயவுகூர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நான் ஏற்கனவே கட்டி வந்த தொகை தான் எனக்கு மின் கட்டணம் ஓடி இருக்கும் அதையே திரும்ப கட்ட வேண்டும் என்று கேட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Similar News