தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்;

Update: 2025-01-17 16:11 GMT
தாராபுரம் அருகே ஆத்துக்கல் புதூர் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. மூலனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைப்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். இதை அடுத்து கோவிலில் பொங்கல் வைத்து கொண்டு இருந்தனர், அப்போது ஏற்பட்ட புகையால் அங்கிருந்த தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்தன. பின்னர் கோவிலில் நின்று கொண்டிருந்த பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டியது இதில் மூலனூர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், சங்கர், அக்ஷயா, செல்வன்,வடிவேல், ஈஸ்வரி தனுஸ்ரீ, ஆகியோர் படுகாயமடைந்தனர் இதை அடுத்து படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி அறிந்ததும் தாராபுரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று கோவில் வளாக அறையில் இருந்த 25க்கும் மேற்பட்ட பக்தர்களை மீட்டனர்.

Similar News