சோளிங்கர்:கொலை வழக்கில் கைதான 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் கைது!;
சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி அதிகாலை பிரபல ரவுடியான சீனு என்பவர், முன்விரோதம் காரணமாக ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராணிப்பேட்டை மேல் வேலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30), ரஞ்சித் (32), திமிரியை சேர்ந்த இளவரசன் (22), ஆகாஷ் (21), சோளிங்கர் ஐப்பேடு பகுதியை சேர்ந்த கோபி (25), பாணாவரம் பகுதியை சேர்ந்த மோகன் (21) நிர்மல் (25) ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மீது குண்டத்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பிவிவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.