பாஸ்கு திருவிழா 7 சப்ர பவனி ஏராளமானோர் பங்கேற்பு

திண்டுக்கல்லில் மேட்டுப்பட்டியில் 334ம் ஆண்டு பாஸ்கு திருவிழா வின் முக்கிய நிகழ்வான 7 சப்ர பவனி ஏராளமானோர் பங்கேற்பு;

Update: 2025-04-27 12:53 GMT
திண்டுக்கல்லை சுற்றியுள்ள 96 கிராமங்களின் தாய் கிராமமாக விளங்கக் கூடியது மேட்டுப்பட்டி. இங்கு மிகவும் பழமையான புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் பண்டிகையின் போது பாஸ்கு திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த வருடம் ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தூம்பா ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு இயேசு உயிர்த்தெழும் காட்சிகளும் பேய் பாஸ்கு நிகழ்ச்சி பஸ்கு மைதானத்தில் உள்ள நாடக மேடையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏழு சப்பரங்களில் உயிர்த்த ஆண்டவரின் ஊர்வலமும் நடைபெற்றது. இதில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் தூதுவர்களான வியாகுல அன்னை, சூசையப்பர், அந்தோணியார், செபஸ்தியார், சவேரியார், சந்தியாகப்பர், ஆகியோரின் ஏழு சப்பரங்கள் நகரின் முக்கிய வீதிகள் ஆன மதுரை ரோடு, பேகம்பூர் மேற்குரதவீதி, மணிக்கூண்டு, வடக்குரத வீதி, சோலைஹால் ரோடு, அங்குவிலாஸ் இரக்கம், வழியாக ஏழு சப்பரங்களும் பவனி வந்து இறுதியாக மேட்டுப்பட்டி தேவாலயத்திற்கு வந்தடைந்தடையும். வழி நெடுகிலும் பொதுமக்கள் சப்ரத்தின் மீது பூக்கள் மிளகு உப்பு தூவி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். சப்ர பவணியை முன்னிட்டு வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐடி செந்தில் குமார் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே சப்பர ஊர்வலம் வந்தபோது இஸ்லாமியர்கள் பங்குத்தந்தை மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுக்கு சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Similar News