கலைஞர் 7-வது நினைவு நாள்- அன்பு கரங்களில் அன்னதானம் வழங்கிய செந்தில் பாலாஜி.

கலைஞர் 7-வது நினைவு நாள்- அன்பு கரங்களில் அன்னதானம் வழங்கிய செந்தில் பாலாஜி.;

Update: 2025-08-07 04:38 GMT
கலைஞர் 7-வது நினைவு நாள்- அன்பு கரங்களில் அன்னதானம் வழங்கிய செந்தில் பாலாஜி. தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் மனநலம் மற்றும் உடல் நலம் குன்றிய மாணாக்கர்கள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் இன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா துணை மேயர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Similar News