சேலம் நுண்ணறிவு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

போலீஸ் கமிஷனர் உத்தரவு;

Update: 2025-08-14 09:16 GMT
சேலம் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய ஏட்டு வைத்திலிங்கம் வீராணம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதே போன்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அழகாபுரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். அழகாபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் பள்ளப்பட்டிக்கும், சவுந்தர்யன் சூரமங்கலத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். காரிப்பட்டி ஏட்டு காவேரி, கன்னங்குறிச்சிக்கும், கன்னங்குறிச்சி ஏட்டு பூபதி அஸ்தம்பட்டிக்கும், அஸ்தம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு காரிப்பட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Similar News