ராசிபுரம் அருகே லிப்ட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற செவிலியரின் மீது மிளகாய் பொடி தூவி 7 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயற்சி..

ராசிபுரம் அருகே லிப்ட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற செவிலியரின் மீது மிளகாய் பொடி தூவி 7 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயற்சி..;

Update: 2025-09-03 15:41 GMT
ராசிபுரம் அருகே லிப்ட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற செவிலியரின் மீது மிளகாய் பொடி தூவி 7 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயற்சி செய்த நிலையில் அவர் பையில் கொண்டு வந்த ரூ.50,000 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்மபெண்... நாமக்கல் அடுத்த புதன்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் இவரது மனைவி வசந்தகுமாரி(61) என்பவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் இந்த தம்பதியினருக்கு ராசிபுரம் அருகே உள்ள பாலபாளையம் பகுதியில் வீடு உள்ளதாகவும் அதன் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்தகுமாரி பாலபாளையம் பகுதி உங்களை தேடி உங்கள் ஊர் முகாம் ஆனது நடைபெற்று வரும் நிலையில் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு மற்றும் பல்வேறு சேவைகளுக்கு மனு அளிப்பதற்காக புதன்சந்தை பகுதியில் இருந்து பாலப்பாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் வசந்தகுமாரிக்கு லிப்ட் தருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் மூணுசாவடி சிவன் கோயில் அருகே உள்ள செம்மாம்பட்டி ஏரி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையோர பள்ளத்தில் கவிழ்த்துவது போல் பாவிலா காட்டி ஓய்வு பெற்ற செவிலியர் வசந்தகுமாரி கீழே தள்ளி உள்ளார். கீழே விழுந்ததில் வசந்தகுமாரிக்கு சிறு காயங்கள் ஏற்படவே அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாகவும் அதனை இழுத்து பிடித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி தூவிதில் வந்தாகுமரி கையில் கொண்டு வந்த ரூ.50,000 ரூபாய் பணப்பையை திருடிச் சென்றுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லிப்ட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.50,000 பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Similar News