தஞ்சையில் லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் கொள்ளை

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு;

Update: 2025-09-12 08:10 GMT
தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஒரு வீட்டில் கார்த்திகேயனும், அதன் அருகே மற்றொரு வீட்டில் அவரது 2 குழந்தைகள் மற்றும் மாமியாரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கார்த்திகேயன் மாமியார் வீட்டைத் திறந்து வெளியே சென்றார். வீட்டினுள் இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர் . இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்து 7 1/2 பவுன் தங்க நகைகள் , ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். சிறிது நேரம் கழித்து கார்த்திகேயன் மாமியார் வீட்டுக்கு வந்தபோது பீரோ திறந்து கிடந்து அதில் வைத்திருந்த நகை, பணத்தைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News