கோவை: விபத்து : பெண் பலி – சிறுமி உள்பட 7 பேர் காயம்
லாரி – சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் காயம்.;
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே பல்லடம்–செட்டிபாளையம் சாலையில் லாரி மற்றும் சரக்கு வாகனம் மோதியதில், ராஜேஸ்வரி (36) என்ற பெண் உயிரிழந்தார். சிறுமி அஸ்விதா (11) உள்பட 7 பேர் காயமடைந்தனர். வடவள்ளியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சவுரிபாளையம் நோக்கி சரக்கு வாகனத்தில் திரும்பி வந்தபோது நேற்று இரவு விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.