கரூர்- நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி மோசடி.பெண் உள்பட 8 பேர் கைது.
கரூர்- நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி மோசடி.பெண் உள்பட 8 பேர் கைது.;
கரூர்- நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி மோசடி.பெண் உள்பட 8 பேர் கைது. கரூர் அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த 4- தனியார் நிதி நிறுவனங்களில் 150-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்களிடம் இருந்து வசூல் செய்த ரூ 7-கோடியை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் மோசடி நிறுவனங்கள் மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ சோமசுந்தரம் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைவேல், வேட்டை மங்கலத்தைச் சேர்ந்த நல்லசிவம், நாமக்கல் நெட்டையாம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன், கீழப்புதூரைசேர்ந்த நவலடி, மொச்சம்பட்டி சரவணன், சுல்தான்பேட்டை கவாஸ்கர், சேந்தமங்கலம் சாந்தி, வீரப்பன் ஆகிய எட்டு பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.