எடப்பாடியில் 7 கோடியே 83 லட்சக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் துவக்கம் EPS

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 7 கோடியே 83 லட்சக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார்..

Update: 2024-09-13 13:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 3 கோடியே 41 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 7 கோடியே 83 லட்சக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் 2011 2016 அதிமுக ஆட்சி கால கட்டங்களில் மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. அதில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அது போன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,நங்கவள்ளியில் பாலிடெக்னிக் கட்டிக் கொண்டுள்ள அரசு எனவும் நகராட்சி,பேரூராட்சி,ஒன்றியங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. என அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி பேசினார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது எடப்பாடி நகரக் கழக செயலாளர் முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News