சேலத்தில் கூரையின் மேற்கூறையை உடைத்து ரூ. 70 ஆயிரம் திருட்டு
போலீசார் விசாரணை;
சேலம் தாதுகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த மூன்றாம் தேதி கடையை மூடி விட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேஜையில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் ரஞ்சித் குமார் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.