திருச்செந்தூர் கடல் 70 அடி தூரம் உள்வாங்கியது!
திருச்செந்தூர் கடற்கரையில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல் பச்சை நிறம் போல் காட்சி அளிக்கும் கடல் கரை பகுதி;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கக்கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும் இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து கடற்கரை பகுதியில் புனித நீராடி செல்வது வழக்கத்தில் ஒன்றாகும் கடற்கரை பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்குவது வழக்கம் இந்த நிலையில் இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் காலையிலிருந்து சுமார் 70 அடி தூரம் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பச்சை நிறம் போல் காட்சியளிக்கும் கடல்கரை பகுதியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுஅச்சமின்றி கடலில் குளித்து வருகின்றனர்.