பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 74 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 74 பேர் மீது வழக்கு பதிவு;

Update: 2025-03-18 00:30 GMT
பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 74 பேர் மீது வழக்கு பதிவு
  • whatsapp icon
தமிழகத்தில் 1000 கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அனுமதி மறுத்து காவல்துறையினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், H.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை கைது செய்தனர். இதை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், 6 பெண்கள் உட்பட 74 பேர் மீது நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசலபதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News