மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியின் நிதி அளிப்பு கூட்டம்

பறக்கை;

Update: 2025-03-21 03:53 GMT
  • whatsapp icon
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) ன் நிதியளிப்பு கூட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியம் பறக்கையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவகோபன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர்.        பின்னர் கட்சி நிதியை பெற்றுக்கொண்டு மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் அகில இந்திய மாநாட்டு நிதியை பெற்றுக்கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ நூர் முகம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவில் மூத்த உறுப்பினர்கள் மணி, மாணிக்கம் ஆகியோர் கவுரவிக்கப் பட்டனர்.         இதில் ஆர்.குமரேசன், எஸ்.மிக்கேல்நாயகி, எஸ்.சொர்ணம் பிள்ளை, கே.பபிதா, கோபாலன், சசி, ராஜேஸ்வரி, பிரசாத், புளி, அலெக்சாண்டர், ராஜலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News