
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும், இளநிலை மின்சார பொறியாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இவை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் அரசிடமும், மின்சார துறையிடமும் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து மின்சார துறை சார்பில் 2019-ம் ஆண்டு 13 இலட்சத்து 75 ஆயிரம் செலவில் பூதப்பாண்டி மேலத்தெருவில் 13.75 சென்று பரப்பளவில் அரசினுடைய பயன்படாத பழைய கட்டிடத்துடன் கூடிய இடத்தை விலைக்கு வாங்கினர். பின்னர் பொதுமக்கள் இந்த இடத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும், இளநிலை பொறியாளர் அலுவலகமும் புதிதாக கட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசு தலைமை மின்சார துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சி தலைவருக்கும், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கும் பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் கொடுத்து வந்தார்கள். அதன் விளைவாக 2019 ம் ஆண்டு அறுபது இலட்சமும், 2020ம் ஆண்டு எழுபத்தி இரண்டு இலட்சத்து அறுபத்தி நாலாயிரமும், 2021ம் ஆண்டு எழுபத்தி ஒன்பது இலட்சமும் 2022ம் ஆண்டு தொன்னொற்றி ஒரு இலட்சத்து நாற்பதாயிரமும் 2023ம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஒரு கோடியே நான்கு இலட்ச ரூபாயும் என வருடா வருடம் மதிப்பீடு மட்டுமே தயாரிக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் இதுவரையிலும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. மின்சார துறைக்கு இடம் வாங்கி ஐந்து வருடம் ஒன்பது மாத மாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்ட நிதி அனுமதி யோ பணியோ நடைபெறவில்லை ஆனால் தற்சமயம் இந்த பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என மின்சார துறை அதிகாரிகள் கூறியதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.