வெள்ளகோவில் திமுக நிர்வாகி லாரியில் மண் கடத்தல் காவல்துறை லாரியை பறிமுதல் செய்து விசாரணை

வெள்ளகோவிலில் திமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான அதிக பாரம் ஏற்றும் லாரியில் மண் கடத்தியதாக காவல் துறையினர் வாகனத்தை  பறிமுதல் செய்தனர்  - காவல்துறை விசாரணை ;

Update: 2025-03-21 03:48 GMT
  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே திமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் நாதநாயக்கன்பட்டி லோகு என்பவருக்கு சொந்தமான அதிக பாரம் ஏற்றும் லாரியில் நேற்று இரவு மண் கடத்தியதாகவும் இரவு ரோந்துப்பணியில் இருந்த காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் பிடித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை. மேலும் எங்கு இருந்து மண் கடத்தப்பட்டது. எங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தீவிர விசாரணை.  காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் பகுதியில் பல இடங்களில் மண் மற்றும் ஆற்று மணல் கடந்த 3 ஆண்டுகளாக கொள்ளை அடிக்கப்படுகிறது. இதற்க்கு உறுதுணையாக திமுக நிர்வாகிகளே உடைந்தையாக செயல்படுவதாக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அழிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை இருந்து வந்தது. இந்நிலையில்  நேற்று இரவு ரோந்து பணியில் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன்  ஈடுபட்டு வந்ததாகவும்  அப்போது அந்த வழியாக வந்த அதிக பாரம் ஏற்றும் 10 சக்கரங்கள் கொண்ட அசோக் லைலேண்ட் லாரியை மடக்கி பிடித்து விசாரித்த போது அதில் எவ்வித உரிமை சான்று இல்லை என கூறப்படுகின்றது. மேலும் திமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும் இளைஞர் அணி அமைப்பாளருமான நாதநாயக்கன்பட்டி லோகு என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கின்றனர். இதை அடுத்து லாரியை வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எங்கு இருந்து மண் கடத்தப்பட்டது. எங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காங்கேயம், வெள்ளகோவில்,ஊதியூர் அருகே அமராவதி ஆறு செல்கின்றது இந்த பகுதிகளில் மண் கொள்ளை அதிகமாக நடைபெறுவதாகவும். இதற்கு உடந்தையாக திமுக நிர்வாகிகள் செயல்படுவதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல காங்கேயம் ஊராட்சிக்கு உட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக துணை தலைவரே மண் கொள்ளையில் ஈடுபட்டது குறிப்பிட தக்கது. அவர் மீது வருவாய்த்துறையினர் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News