ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 76 மனுக்கள்.

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-02-17 16:32 GMT
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் 76 கோரிக்கை மனு கொடுத்தனர். ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது . இதில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசு சான்று, தடையின்மை சான்று, ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆர் திருத்தம், வரைபட திருத்தம், உட்பிரிவு பட்டா மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமி்பபு அகற்ற கோரி, மாற்றுத்திறனாளிக்கு இலவச மூன்று சக்கர வாகனம், மின் கம்பம் அகற்றக்கோரி, கலப்புத் திருமணச் சான்று, சட்டவிரோத மது விற்பனை புகார் மனு, ஊராட்சி மன்ற நிதி முறைகேடு, கிராம சபா நடத்த கோரி, விதவை பென்ஷன்,கல்வி உதவித்தொகை, சாலை அமைத்து தரக்கோரி, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 76 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலர் உத்தரவிட்டார்.

Similar News