திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ 760 லட்சம் மதிப்பீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தஜெயங்கொண்டம் எம் எல் ஏ.
திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ 760 லட்சம் மதிப்பீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.க.சொ.க. கண்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த;
அரியலூர், ஜூலை.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜன்பேட்டை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் 2024- 2025 2.0 திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூபாய் 760 லட்சம் மதிப்பீட்டில் கசடு, கழிவு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிக்காக ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரங்கமுருகன், வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஃபிக், பேரூராட்சி தலைவர் மார்க்ரேட்அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின்ஆர்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.