கடலூர்: ஒரே நாளில் 780 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 780 மனுக்கள் குவிந்துள்ளது.;

Update: 2025-06-17 16:35 GMT
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்‌. இந்த நிலையில் நேற்று (ஜூன் 16) மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 780 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கூறியுள்ளார்.

Similar News