வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

Update: 2024-08-02 12:40 GMT
திண்டுக்கல் கோவிந்தாபுரம் 3வது நாயக்கர் புது தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது சொந்த வீட்டின் மேல் மாடியில் மகன் பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கருப்பண்ணன் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கருப்பண்ணன் இறந்து விட்டார். ஆகையால் கருப்பண்ணன் வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பாலசுப்பிரமணியம் குடும்பத்துடன் முதல் மாடியில் தூங்க சென்றார். இன்று 02.08.24 காலை கீழே வந்து பார்த்த பொழுது தந்தை வசித்து வந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாலசுப்பிரமணியன் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க காசு திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு போன வீட்டில் குற்றவாளிகள் கைரேகை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News