காங்கேயம் நகராட்சி அவசரக் கூட்டம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-08-13 04:43 GMT
காங்கேயம் நகராட்சி அலுவலக நகர்மன்ற கூட்டத்தில் நேற்று காங்கேயம் நகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கனிராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் நவீன கட்டண கழிப்பிடம் கட்டிடம் ஆகியவற்றிற்கான ஏலம் மற்றும் ஒப்பந்தப்பு புள்ளி கோருதல், குடிநீர் குழாய்கள் பழுது பார்க்கும் பணி மின் மோட்டார் மற்றும் சிறு மின்விசைப்பம்பில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு முதல் 9வது வார்டு வரையிலான பகுதிகளில் குடிநீர் குழாய்கள் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள ரூ.10 லட்சத்திற்கு அனுமதி வழங்கியும் 10 முதல் 18 வரையிலான பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பழுதுபார்த்தல் பணிகளுக்காக ரூ 10 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்வது உட்பட 8  தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் காங்கேயம் நகரம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News