திருச்சியில் இழப்பீடு வழங்காததால், 8 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் திருச்சி நீதிமன்ற உத்த ரவின்பேரில், 8 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.;
திருச்சி எட்டரை இந்திராநகரை சேர்ந்தவர் மதுக்குமார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராணியின் மகன் பவித்ரன் (வயது 24) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் ராம்ஜிநகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி இருவரும் பலியாகி னர். இந்த விபத்தில் இறந்த மதுக்குமாரின் மனைவி மாரிக்கண்ணு தனக்கு அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்க கோரி திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் விபத்தில் இறந்த பவித்ர னின் தாய் ராணியும் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.16 லட் சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு தொகையை வழங்காததால் பாதிக்கப் பட்டவர்கள் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். புகார்தாரர்கள் தரப்பில் வக்கீல் ராஜேந்திரகுமார் ஆஜராகி வாதாடினார். இதில் மாரிக் கண்ணுவுக்கு ரூ.23 லட்சம் மற்றும் ராணிக்கு ரூ.22 லட்சத்தை வட்டியு டன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தொகையை வழங்காததால் மாவட்ட சிறப்பு கோர்ட்டு நீதிபதி நந்தினி. அரசு போக்குவரத்து கழகத் துக்கு சொந்தமான 8 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்களான கார்த்திகேயன், கிருத்திகா ஆகி யோர் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று பல்வேறு ஊர் களுக்கு புறப்பட தயாராக இருந்த 8 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தினர். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஒரேநாளில் 8 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.